வாழைப்பூ குழம்பு

தேவையான பொருட்கள் :-
வாழைப்பூ - 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
தேங்காய் - 2 சில்லு
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
புளி - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 2
நல்லெண்ணெய் - தாளிக்க
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:-
1) வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2) தேங்காய், வெங்காயம், சீரகம், ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3) குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,வெந்தயம், போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் கீறியது போட்டு வதக்கவும்.
4) புளி கரைசல், அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
5) அதோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள், போட்டு கிளறவும். பிறகு அதோடு சுத்தம் செய்த வாழைப்பூவையும் போட்டு கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வந்தவுடன்,எடுத்து பரிமாற வேண்டியதுதான். வாழைப்பூ குழம்பு தயார்.
Labels: குழம்பு
12 Comments:
ஸ்பூன்,தேக்கரண்டி இரண்டும் ஒன்று தானே...?
தகவலுக்கு நன்றி வழைப்பூ கிடைத்தவுடன்/கிடைக்கும்போது செய்து பாக்கின்றேன்!
10 வெங்காயமா?
நன்றி anonimous..!
ஸ்பூன்,தேக்கரண்டி இரண்டும் ஒன்றுதான்..
babu,
10 சின்ன வெங்காயம் என வாசிக்கவும்.
Vannakam, How do you display all the text in Tamil and Vazhappu Kuzhamu looks fantastic!
I like this recipe. Sounds very healthy! I have to try this one!
Nilachoru, I tried this recipe and it became a big hit in our household and with the guests too. Earlier we used to make only porial and vadai with vazhaipoo. This is a novel creation. Thanks for sharing this recipe. Btw, why haven't you posted anything for a while? Please don't stop.
Hi,
I came across your blog. It is very nice and you are putting healthy recipes thanx.
நிலா சோறு,
அருமையான முயற்சி. அற்புதம். அடிக்கடி எழுதுங்கள். தேன் சொட்டும் தமிழில் வலை பதிவதே ஒரு சுகம் தானே!
Nila, this recipe was awesome, simple, healthy yet tasty. Btw, enna aachu? romba naala updates-e illa. I still have your site in my favourites list, but I only visit everytime to get disappointed. Seekiram blog-kku thirumbunga, please...
வணக்கம்
நான் முதல் முறையாக உங்களுடைய blogக்கு வருகிறேன்.மிகவும் அருமையாக இருக்கிறது.வாழைப்பூ குழம்பு செய்முறை மிகவும் தெளிவாக இருக்கிறது.மிக்க நன்றி.
http://priars.blogspot.com
hi , i was trying to find recipe for vazhappu...but i didnt find much collections...but you are recipe sounds very good... going to prepare today.....will update you once done...
rgds,
viji
wow this looks so good. yummy!
Post a Comment
<< Home