Thursday, September 29, 2005

கடாய் சிக்கன்

கடாய் சிக்கன்
கடாய் சிக்கன்

தேவையான பொருட்கள்:-


சிக்கன் - 3/4 கிலோ
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
கொத்தமல்லி - 1/4 கட்டு
புதினா - 10 இலை
புளி - 2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
பட்டை - 1
லவங்கம் - 1
தனியா தூள் - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி - 1 அங்குலம்
பூண்டு - 5 பல்
தேங்காய் பால் - 1 டம்ளர்
எண்ணெய் - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:-


1. இரும்பு கடாயில் 1 கரண்டி எண்ணெய் விட வேண்டும்.

2.எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு,ஏலக்காய்,லவங்கம்,பட்டை ஆகியவற்றை
சேர்க்கவும்.

3.வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

4.அதோடு இஞ்சி, பூண்டு அரைத்த விழுதையும் , தக்காளி சிறியதாக
நறுக்கியதையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

5.அதோடு புதினா,கொத்தமல்லி, பச்சைமிளகாயும் போட்டு வதக்கவும்.

6. சிக்கனை சேர்த்து அதே சுட்டில் வேகவிடவும்.

7. உப்பு சேர்த்து, தேங்காய்ப் பாலும் சேர்த்து கிளறவும்.

8. பிறகு மிளகாய்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து
நன்றாக கிளறவும்.

9. சிறிது புளியை கரைத்து சேர்க்கவும்.

10. நன்றாக மூடி எண்ணெய் விட்டவுடன் எடுத்து பரிமாறவும்.

7 Comments:

Anonymous Anonymous said...

இது ஒரு மிகச்சிறந்த பதிவு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Sunday, October 30, 2005 7:53:00 AM  
Anonymous Anonymous said...

yirukkumayya yirukkum

Wednesday, November 02, 2005 10:29:00 PM  
Anonymous Anonymous said...

முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணி எப்போ வரும்?

வாயில் நீரொழுக காத்துகிட்டிருக்கோம்யா

Thursday, November 03, 2005 6:34:00 PM  
Blogger அன்பு said...

்க்க் கடாய் சிக்கான் நல்லாருந்துச்சா... நாங்களும் இந்த வாரயிறுதியில் ட்ரை பண்ணனும். நேற்றுத்தான் ராஜ் டிவியுடைய ஒரு விசிடி-யில் இந்த செய்முறை பார்த்தோம்.

நன்றி.

Friday, November 11, 2005 8:59:00 AM  
Anonymous Anonymous said...

I really happy to read your tamil blog.

Tuesday, January 17, 2006 12:23:00 AM  
Anonymous Anonymous said...

Hi,

Prepared vazhaipoo kuzhambu and needless to say, it turned out so so great. Tasted somewhat closer or hotel variety itself!!!

Keep posting more goodies..

Rgds.

Saturday, April 22, 2006 4:56:00 PM  
Blogger indianadoc said...

could have made it more accessible by incorporating an english version too...all the best...good work...

Sunday, April 30, 2006 3:08:00 AM  

Post a Comment

<< Home