Sunday, November 20, 2005

வாழைப்பூ குழம்பு




தேவையான பொருட்கள் :-

வாழைப்பூ - 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
தேங்காய் - 2 சில்லு
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
புளி - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 2
நல்லெண்ணெய் - தாளிக்க
உப்பு - சுவைக்கேற்ப





செய்முறை:-

1) வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

2) தேங்காய், வெங்காயம், சீரகம், ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

3) குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,வெந்தயம், போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் கீறியது போட்டு வதக்கவும்.

4) புளி கரைசல், அரைத்த விழுது போட்டு வதக்கவும்.

5) அதோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள், போட்டு கிளறவும். பிறகு அதோடு சுத்தம் செய்த வாழைப்பூவையும் போட்டு கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வந்தவுடன்,எடுத்து பரிமாற வேண்டியதுதான். வாழைப்பூ குழம்பு தயார்.

Labels:

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை


தேவையான பொருட்கள்:-

வாழைப்பூ - 1
வெங்காயம் - 15
கொத்தமல்லி - 1 கட்டு
கறிவேப்பிலை - சிறிது
கடலை பருப்பு - 1 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு




செய்முறை :-

1) கடலைபருப்பை ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

2) கடலைபருப்பு, சோம்பு, மிளகாய்வத்தல், உப்பு போட்டு சிறிது
கொர கொரப்பாக ஆட்டிக் கொள்ளவும்.

3) வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

4)வாழைப்பூ, வெங்காயம், கொத்தமல்லி,கறிவேப்பிலை ஆகியவற்றை மிகவும்
பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.



5) அரைத்த கலவையுடன் நறுக்கியவற்றையும் போட்டு கிளறிக்
கொள்ளவும்.

6) அதை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி வடையாக
தட்டி போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டியதுதான்.

சுவையான வாழைப்பூ வடை தயார்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, November 08, 2005

குழாய்ப்புட்டு

தேவையான பொருட்கள்:-

அரிசி மாவு - 3 கப்
வெல்லம் அல்லது சர்க்கரை - 2 கப்
(உங்கள் தேவைக்கு)
தேங்காய் துருவல் - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சிறிது
புட்டு குழல்




செய்முறை:-

1. அரிசிமாவில் வெல்லம், தேங்காய் துருவல், உப்பு போட்டு கிளறி கொள்ளவும்.
பிறகு சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசறி கொள்ளவும்.எல்லாம் சிறிது நனைந்து இருக்க வேண்டும்.

2. பிறகு புட்டுக் குடத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

3. புட்டுக் குழலில் நாம் பிசறி வைத்துள்ள் மாவை இட்டு நிரப்பி அதை புட்டுக்குடத்தின் மீது வைத்து வேக விடவும்.

4 புட்டு வெந்தவுடன் எடுத்து சுவைக்கலாம்.





நாம் அரிசிமாவுக்கு பதில் கேழ்வரகு மாவை கூட பயன்படுத்தலாம். புட்டுகுழல் இல்லாதவர்கள் மாவை குழிக்கரண்டியில் மெதுவாக அமுக்கி இட்லி தட்டில் அடுக்கி வேகவைக்கவும். சுவையான சிற்றுண்டி தயார்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சூடான பஜ்ஜி....!




பஜ்ஜி

தேவையான பொருட்கள்:-

கடலைமாவு - 2 கப்
மிளகாய்தூள் - 1 மேஜைகரண்டி
சோடாஉப்பு - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
கலர்பொடி - சிறிது
உப்பு - தேவையான அளவு
கத்திரிக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
வாழைக்காய் - 1
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :-


1. கடலைமாவு, மிளகாய்தூள், சோடாஉப்பு, பெருங்காயத்தூள்,கலர்பொடி,உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து தோசைமாவுக்கு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும்.

2. பிறகு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை மிகவும் மெலிதாக வெட்டி, பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.

3. பஜ்ஜி உப்பி வந்தவுடன் எடுத்து விருப்பமான சட்னியுடன் பரிமாற வேண்டியதுதான். கரகர மொறு மொறு பஜ்ஜி தயார்...!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, October 15, 2005

தயிர் சாதம்



தயிர் சாதம்

தேவையான பொருட்கள் :

அரிசி 2 கப்
தயிர் 2 மேஜைக்கரண்டி
பால் 1 கப்
கருவேப்பிலை சிறிது
கொத்துமல்லி சிறிது
மாங்காய் 1 துண்டு
இஞ்சி 1 அங்குலம்
பச்சை மிளகாய் 2
கடுகு, உளுத்தம்பருப்பு சிறிது

செய்முறை:

1) சாதத்தை சிறிது குழைவாக வேகவைத்துக்கொள்ளவும். அதனுடன் பால் தயிர் ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும்.

2) ஓரு வாணலியில் சிறிது நெய்விட்டு அதில் கடுகு, உ.பருப்பு, க.வேப்பிலை,பொடியாக நறுக்கிய ப.மிளகாய், இஞ்சி, மாங்காய் ஆகியவற்றைப்போட்டுத் தாளித்து சாதத்தில் போட்டுக்
கிளறவும்.

3) பொடியாக நறுக்கிய கொ.மல்லியை அதன் மேல் தூவி அலங்கரிக்கவும்.

சுவையான தயிர் சாதம் ரெடி.. இது செய்வதற்கும் மிகவும் எளிது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கோழிக் குழம்பு


கோழிக் குழம்பு

தேவையான பொருட்கள்:-

கோழி - 500 கிராம்
தேங்காய் - 1/2 முடி
வெங்காயம் - 150 கிராம்
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
சோம்பு - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்

செய்முறை:-


1. குக்கரில் சிறிது நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன்
சோம்பு போட்டு பொரியவிடவும்.

2. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காய்த்தையும் சேர்த்து
பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

3. அதில் நன்றாக கழுவிய கோழிக்கறியுடன் அரைத்த தேங்காய்
சேர்த்து கிளறவும்.

4. பிறகு அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள்
சேர்க்கவும்.

5. பிறகு குக்கரை மூடி 3 விசில் வரும் வரை விடவும்.

6. எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.

இந்த கோழிக்குழம்பை சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Labels:

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, September 29, 2005

கடாய் சிக்கன்

கடாய் சிக்கன்
கடாய் சிக்கன்

தேவையான பொருட்கள்:-


சிக்கன் - 3/4 கிலோ
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
கொத்தமல்லி - 1/4 கட்டு
புதினா - 10 இலை
புளி - 2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
பட்டை - 1
லவங்கம் - 1
தனியா தூள் - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி - 1 அங்குலம்
பூண்டு - 5 பல்
தேங்காய் பால் - 1 டம்ளர்
எண்ணெய் - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:-


1. இரும்பு கடாயில் 1 கரண்டி எண்ணெய் விட வேண்டும்.

2.எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு,ஏலக்காய்,லவங்கம்,பட்டை ஆகியவற்றை
சேர்க்கவும்.

3.வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

4.அதோடு இஞ்சி, பூண்டு அரைத்த விழுதையும் , தக்காளி சிறியதாக
நறுக்கியதையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

5.அதோடு புதினா,கொத்தமல்லி, பச்சைமிளகாயும் போட்டு வதக்கவும்.

6. சிக்கனை சேர்த்து அதே சுட்டில் வேகவிடவும்.

7. உப்பு சேர்த்து, தேங்காய்ப் பாலும் சேர்த்து கிளறவும்.

8. பிறகு மிளகாய்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து
நன்றாக கிளறவும்.

9. சிறிது புளியை கரைத்து சேர்க்கவும்.

10. நன்றாக மூடி எண்ணெய் விட்டவுடன் எடுத்து பரிமாறவும்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.