Sunday, November 20, 2005

வாழைப்பூ குழம்பு




தேவையான பொருட்கள் :-

வாழைப்பூ - 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
தேங்காய் - 2 சில்லு
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
புளி - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 2
நல்லெண்ணெய் - தாளிக்க
உப்பு - சுவைக்கேற்ப





செய்முறை:-

1) வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

2) தேங்காய், வெங்காயம், சீரகம், ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

3) குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,வெந்தயம், போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் கீறியது போட்டு வதக்கவும்.

4) புளி கரைசல், அரைத்த விழுது போட்டு வதக்கவும்.

5) அதோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள், போட்டு கிளறவும். பிறகு அதோடு சுத்தம் செய்த வாழைப்பூவையும் போட்டு கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வந்தவுடன்,எடுத்து பரிமாற வேண்டியதுதான். வாழைப்பூ குழம்பு தயார்.

Labels:

வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை


தேவையான பொருட்கள்:-

வாழைப்பூ - 1
வெங்காயம் - 15
கொத்தமல்லி - 1 கட்டு
கறிவேப்பிலை - சிறிது
கடலை பருப்பு - 1 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு




செய்முறை :-

1) கடலைபருப்பை ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

2) கடலைபருப்பு, சோம்பு, மிளகாய்வத்தல், உப்பு போட்டு சிறிது
கொர கொரப்பாக ஆட்டிக் கொள்ளவும்.

3) வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

4)வாழைப்பூ, வெங்காயம், கொத்தமல்லி,கறிவேப்பிலை ஆகியவற்றை மிகவும்
பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.



5) அரைத்த கலவையுடன் நறுக்கியவற்றையும் போட்டு கிளறிக்
கொள்ளவும்.

6) அதை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி வடையாக
தட்டி போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டியதுதான்.

சுவையான வாழைப்பூ வடை தயார்.

Tuesday, November 08, 2005

குழாய்ப்புட்டு

தேவையான பொருட்கள்:-

அரிசி மாவு - 3 கப்
வெல்லம் அல்லது சர்க்கரை - 2 கப்
(உங்கள் தேவைக்கு)
தேங்காய் துருவல் - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சிறிது
புட்டு குழல்




செய்முறை:-

1. அரிசிமாவில் வெல்லம், தேங்காய் துருவல், உப்பு போட்டு கிளறி கொள்ளவும்.
பிறகு சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசறி கொள்ளவும்.எல்லாம் சிறிது நனைந்து இருக்க வேண்டும்.

2. பிறகு புட்டுக் குடத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

3. புட்டுக் குழலில் நாம் பிசறி வைத்துள்ள் மாவை இட்டு நிரப்பி அதை புட்டுக்குடத்தின் மீது வைத்து வேக விடவும்.

4 புட்டு வெந்தவுடன் எடுத்து சுவைக்கலாம்.





நாம் அரிசிமாவுக்கு பதில் கேழ்வரகு மாவை கூட பயன்படுத்தலாம். புட்டுகுழல் இல்லாதவர்கள் மாவை குழிக்கரண்டியில் மெதுவாக அமுக்கி இட்லி தட்டில் அடுக்கி வேகவைக்கவும். சுவையான சிற்றுண்டி தயார்.

சூடான பஜ்ஜி....!




பஜ்ஜி

தேவையான பொருட்கள்:-

கடலைமாவு - 2 கப்
மிளகாய்தூள் - 1 மேஜைகரண்டி
சோடாஉப்பு - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
கலர்பொடி - சிறிது
உப்பு - தேவையான அளவு
கத்திரிக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
வாழைக்காய் - 1
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :-


1. கடலைமாவு, மிளகாய்தூள், சோடாஉப்பு, பெருங்காயத்தூள்,கலர்பொடி,உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து தோசைமாவுக்கு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும்.

2. பிறகு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை மிகவும் மெலிதாக வெட்டி, பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.

3. பஜ்ஜி உப்பி வந்தவுடன் எடுத்து விருப்பமான சட்னியுடன் பரிமாற வேண்டியதுதான். கரகர மொறு மொறு பஜ்ஜி தயார்...!